பெண்களுக்கான சுகாதார பொருட்கள் மீதான வரியை குறைக்க தீர்மானம்!

சுகாதார துவாய்கள் மீதான வரியை குறைப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்களுக்கான சுகாதார துவாய்களுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.